Home » News » Tamil-nadu » KU KA SELVAM EXCLUSIVE VEL VJR

Exclusive : கட்சி தாவல் தடை சட்டத்தால் பதவி பறிபோய்விடும் என்பதால் திமுக-வில் இருந்து விலகவில்லையா? கு.க.செல்வம் பதில்

10 நாட்களுக்கு முன்பாக ஆர் எஸ் பாரதி அவர்களிடம் தலைமை நிலைய செயலாளர் பதவியும் வேண்டாம்,  செயற்குழு பதவியும் வேண்டாம் என்றேன்.

Exclusive : கட்சி தாவல் தடை சட்டத்தால் பதவி பறிபோய்விடும் என்பதால் திமுக-வில் இருந்து விலகவில்லையா? கு.க.செல்வம் பதில்
எம்.எல்.ஏ கு.க.செலவம்
  • Share this:
கட்சி பதவியிலிருந்து  திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

கட்சி தலைமையின் மீது ஏற்பட்ட  அதிருப்தி காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளருமான கு.க.செல்வம் நேற்று மாலை டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம் தன் பாஜகவில் இணையவில்லை என்றும் தொகுதி மேம்பாட்டிற்காக மட்டுமே மத்திய அமைச்சர் சந்தித்ததாகவும், மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் திமுக மீது வைத்திருந்தார்.


இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கு.க. செல்வத்தை திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அறிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து வருவதை சுட்டிக்காட்டி அவரை தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது எனவும் விளக்கம் கேட்டு திமுக தரப்பில் இருந்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கு.க.செல்வம் நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நான் கடவுள் பக்தி கொண்டவன் என்ற அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப தற்போது  ராமர் கோவில் கட்டுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்தேன். அதன்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தேன். பாஜக தலைவர்களை சந்திக்கிறீர்களே  திமுகவில் இருந்து நீக்க மாட்டார்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்..தைரியமிருந்தால் நீக்கிக் கொள்ளுங்கள் என பதில் அளித்திருந்தேன்

திமுக கொடுத்த அறிக்கையை இதுவரை நான் பார்க்கவில்லை.
வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு,  திமுக கொடுத்துள்ள அறிக்கையை  பொறுமையாக படித்து பார்த்துவிட்டு திமுக-விற்கு நிச்சயம் விளக்கம் தருவேன்.

கட்சி தாவல் தடை சட்டத்தால் பதவி பறிபோய்விடும் என்பதால் திமுகவில் இருந்து விலகவில்லையா? என்ற கேள்விக்கு, எம்எல்ஏ பதவி போனாலும் பரவாயில்லை. நான் ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பாக ஆர் எஸ் பாரதி அவர்களிடம் தலைமை நிலைய செயலாளர் பதவியும் வேண்டாம்,  செயற்குழு பதவியும் வேண்டாம். உங்களுக்கு உபயோகப்படும் என்றால் எம்.எல்.ஏவாக பதவியை வகிக்கிறேன், இல்லையென்றால் விலகுகிறேன் என ஏற்கனவே கூறிவிட்டேன்.

நீங்கள் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு?
பாஜக தலைவர் முருகன் அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் அதுகுறித்து தெரிவிப்பதாக கு.க.செல்வம் கூறினார்
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம் பேசினார், அப்புாது மாவட்ட செயலாளராக ஒருவரை நியமிப்பதாக மட்டும் கூறினார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading