ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்...? தீபா தரப்புக்கு நீதிபதி கேள்வி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்து இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்துள்ளார்.

ஜெ. தீபா
- News18 Tamil
- Last Updated: August 7, 2020, 11:58 AM IST
போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, அந்த நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சட்டப்பூர்வமான வாரிசுகளான தங்களை கேட்காமல், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு அவசரம் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Also read... மக்களின் கொரோனா அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நிலம் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஏற்கனவே இதே போன்று தீபக் தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கையும் அதே அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதுவரை அசையும் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி,
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கு இருந்தீர்கள் என தீபா தரப்புக்கு கேள்வி எழுப்பி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சட்டப்பூர்வமான வாரிசுகளான தங்களை கேட்காமல், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.