Home » News » Tamil-nadu » INQUIRY COMMISSION DECIDE TO SEND NOTICE COMPLAINANTS AGAINST SURAPPA SKD GEE

சூரப்பா மீது புகார் அளித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு

அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது புகார் அளித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்ய விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சூரப்பா மீது புகார் அளித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு
துணைவேந்தர் சூரப்பா.
  • Share this:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இவர் விசாரணையை தொடங்கினார். இந்த நிலையில் வரும் வாரத்தில் துணைவேந்தர் சூரப்பா மீது புகார் தெரிவித்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரடியாக அழைத்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரி கலையரசன் முடிவு செய்துள்ளார்.

மேலும் சுரப்பா மீதான புகார்களை விசாரிக்க தனி அலுவலகம் பசுமை வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் குறித்து  உரிய ஆதாரம் இருப்பவர்கள் நேரடியாக நாளை முதல் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரப்பா மீது சுரேஷ் என்பவரும் வரதராஜன் என்பவரும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: November 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading