கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு... சயான், மனோஜ் ஜாமீன் மனுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு... சயான், மனோஜ் ஜாமீன் மனுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீன் மனுக்கள் குறித்து ஜூலை 16 ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.

இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என, இருவரும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்ப ராஜ், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

Also read... வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன...? மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு!

இதையடுத்து, காவல்துறையை வரும் 16 ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இறுதி விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading