ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
தமிழக அரசு சமீபத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி,ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கு ஓய்வு வயதை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகள் குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலுவையில் இருந்தும் பணியில் தொடரும் அரசு ஊழியர்கள் குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


Also read... 93 வயதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் ராக்கம்மாள் பாட்டி - 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்தல்!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு அபராதம் விதிக்கத்தக்கது தான் என்ற போதும், அதை தவிர்ப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading