'டிக்டாக் தடை நெஞ்சு வலிக்கிறது' டிக்டாக் புகழ் ஜி.பி முத்து வேதனை

'டிக்டாக் தடை நெஞ்சு வலிக்கிறது' டிக்டாக் புகழ் ஜி.பி முத்து வேதனை

 • Share this:
  டிக்டாக் தடை செய்வதால் நெஞ்சு வலி வருவது போல் இருக்கிறது என டிக்டாக் புகழ் ஜி.பி முத்து வேதனை தெரிவித்துள்ளார்.

  இந்தியாவின் மிக அதிக பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. நவீன கூத்துபட்டறையாக திகழ்ந்த டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் இந்தியாவில் 14 மொழிகளில் டிக் டாக்கில் இயங்கும் அத்தனை ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  இதனிடையே டிக்டாக்கில் மிகவும் பிரபலமான டிக்டாக் புகழ் ஜி.பி முத்து இது குறித்து தெரிவிக்கையில், டிக்டாக் தடை செய்வதால் நெஞ்சு வலி வருவது போல் இருக்கிறது. ரெம்ப ரெம்ப சங்கடமாக இருக்கிறது. இனி சிங்காரி ஆப் பயன்படுத்தப் போகிறேன்.

  தடை செய்தால் பேனா உள்ளிட்ட அனைத்து சீன பொருட்களையும் தடை செய்யுங்கள். எதுவும் வேண்டாம். டிக்டாக்கை மட்டும் தடை செய்வது எல்லோருக்கும் மன உளைச்சல் என வேதனை தெரிவித்துள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: