முகவரி மாறிய மாற்றுத் திறனாளிகளுக்கும் வீடு தேடி வரும் நிவாரணம்

முகவரி மாறி வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முகவரி மாறிய மாற்றுத் திறனாளிகளுக்கும் வீடு தேடி வரும் நிவாரணம்
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • Share this:
ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த அறிவிப்பை முறைப்படி செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Also read... பக்ரீத் பண்டிகை - ஆன்லைன் மூலம் ஆடு விற்கும் வியாபாரிகள்இந்த நிலையில் ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இருப்பிடம் மாறி வசிப்பதாகவும், அவர்கள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading