ஜீன்ஸ் பேன்ட்டில் பெல்ட் அணியும் பகுதியில் வைத்து நூதன முறையில் தங்கம் கடத்தல் - 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேன்ட்டில் பெல்ட் அணியும் பகுதியில் பாலித்தீன் கவர்களில் தங்கத்தை வைத்து கடத்திவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
துபாயிலிருந்து வந்த மீட்பு விமானத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து 175 இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம், சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தது. அப்போது, பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளை சோதனை செய்ததில், தஞ்சாவூரைச் சேர்ந்த கொளஞ்சி மற்றும் முருகன் சந்திரன் ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.



தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ஜீன்ஸ் பேன்ட்டில் பெல்ட் அணியும் பகுதியில் பாலித்தீன் கவர்களில் தங்கத்தை வைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான முக்கால் கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading