கோவையிலிருந்து சென்னை , பாண்டிச்சேரி, பெங்களூரு உட்பட தொலை தூரங்களுக்கு செல்லும் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் குறைவான பயணிகளே பயணித்தனர்.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருவதால் இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் காலையிலேயே இயக்கப்படுகின்றன.
குறிப்பாக கோவை காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி உட்பட தொலை தூரங்களுக்கு செல்லும் விரைவு போக்குவரத்து
பேருந்துகள் காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை 11 மணி வரை மட்டுமே சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகள் காந்திபுரத்தில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால் அவற்றில் குறைந்த அளவு பயணிகள் மட்டும் பயணிக்கும் நிலை இருக்கின்றது.
Also read... கடலில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி...!
சென்னை செல்லும் பேருந்துகளில் குறைந்தது 10 பயணிகள் ஏறினால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும் என்பதால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
இரவு 9 மணிக்குள் ஊர்களுக்கு செல்லும் வகையில் பேருந்துகள் கோவை பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதே போல கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து
மதுரை, திருச்சி, கரூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கும் இன்று பிற்பகல் 4 மணி வரை மட்டுமே கோவையில் இருந்து இயக்கப்படுகின்றது. இதனால் மாலை நேரத்தில் பயணத்திட்டம் வைத்திருப்பவர்கள் முன் கூட்டியே பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டிய நிலையானது ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.