Exclusive | 'எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? பாஜக மீது மன வருத்தத்தில் இருக்கிறேன்’ - நயினார் நாகேந்திரன்

பாஜகவில் முக்கிய தலைவராக அறியப்படும் நயினார் நாகேந்திரன் பாஜக மீது மன வருத்தத்தில் இருக்கிறேன் என்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

  • News18
  • Last Updated: August 3, 2020, 3:58 PM IST
  • Share this:
முன்னாள் அமைச்சர் மற்றும் பாஜகவில் முக்கிய தலைவராக அறியப்படும் நயினார் நாகேந்திரன் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், தன்னை தனிமை படுத்திக்கொண்டதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? பாஜக மீது மன வருத்தத்தில் இருக்கிறேன் என்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



2001-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சசிகலாவின் ஆதரவாளராக இருந்ததால் அவர் போக்குவரத்து துறை, மின்துறை, தொழில்துறை ஆகிய முக்கிய இலாகாக்களின் அமைச்சராக வலம் வந்தார்.

2006 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 2011-ல் அவருக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றி, அதிமுகவின் நெல்லை மாவட்ட செயலாளர் என அவரின் அரசியல் களம் சிறப்பாகவே இருந்தது.

2016 தேர்தலில் நெல்லை தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட்டு மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனை அடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிது காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 2017-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடிரென பாஜகவில் இணைந்தார்.2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தினார். இறுதிச் சுற்று வரை அவரது பெயரும் பரீசீலனையில் இருந்தது,  யாரும் எதிர்பார்ககாத வகையில் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அரசியலில் ஆர்வம் காட்டாமல் அதிருப்தியில் இருந்த அவரை சமீபத்தில் நெல்லை வந்த மாநில தலைவர்  முருகன் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading