பாஜக ஆதரவாளராக மாறிய கு.க செல்வம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்
- News18 Tamil
- Last Updated: August 5, 2020, 1:19 PM IST
கட்சி தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளருமான கு.க.செல்வம் நேற்று மாலை டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம் தன் பாஜகவில் இணையவில்லை என்றும் தொகுதி மேம்பாட்டிற்காக மட்டுமே மத்திய அமைச்சர் சந்தித்ததாகவும், மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் திமுக மீது வைத்திருந்தார்.
Also read... 10% இடஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கு.க. செல்வத்தை திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அறிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து வருவதை சுட்டிக்காட்டி அவரை தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது எனவும் விளக்கம் கேட்டு திமுக தரப்பில் இருந்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம் தன் பாஜகவில் இணையவில்லை என்றும் தொகுதி மேம்பாட்டிற்காக மட்டுமே மத்திய அமைச்சர் சந்தித்ததாகவும், மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் திமுக மீது வைத்திருந்தார்.
Also read... 10% இடஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு