காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பின்தங்கிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வரிடம் கோரிக்கை

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பின்தங்கிய இளைஞர்களுக்கு காவலர் பணிக்கு வாய்ப்பளிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் இளைஞர்கள் மனு அளித்துள்ளனர்.

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பின்தங்கிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வரிடம் கோரிக்கை
முதல்வருக்கு ம்னு எழுதிய தேர்வு எழுதிய கடலூர் இளைஞர்கள்
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் தேர்வை எழுதிய இளைஞர்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 2019 - ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20,000 - த்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று அவர்களில் 8,888 காலிப்பணியிடங்கள் நிரப்பபட்டது. மீதமுள்ள 11,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் 2020-2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டதொடரில் 10,000-த்திற்க்கும் மேற்பபட்ட காவலர் காலிப்பணிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தற்போதுள்ள கொரோனாவினால் காலச் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் இனிவரும் காலங்களில் காவல்துறை தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்த  நடத்த முடியுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.


எனவே கடந்த முறை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சிபெற்று காலிபணியிடம் இல்லாமல் பணியில் சேர முடியாமல் உள்ளவர்களில் வயது அடிப்படையில் இறுதிகட்டத்தில் உள்ளவர்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் அனைவரையும் அறிவிக்கப்பட்ட காவலர் காலிபணியிடங்களில் நிரப்ப முடியும்.

மேலும் நாங்கள் அனைவரும் 2019 - ம் ஆண்டு நடைபெற்ற காவலர் எழுத்து தேர்விலும் , உடற்தகுதி தேர்விலும் , சான்றிதழ் சரிபார்ப்பிலும் தேர்ச்சி பெற்று மொத்த மதிபெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் இல்லாமல் பின்தங்கியவர்கள் தான். தேல்வியடைந்தவர்கள் அல்ல.

எனவே எங்களுக்கு இந்தவருட காலிப்பணியிடங்களில் வாய்ப்பளித்தால் மருத்துவ பரிசோதனை மட்டும் தான் நடத்த வேண்டும். மேலும் காவலராக தேர்வு செய்யப்பட்டால் நாங்கள் பயிற்சி பெரும் 6 மாத காலமும் எனக்கு எந்தவித ஊதியம் வழங்கவேண்டாம் எனவும் தற்போது கொரோனா சூழ்நிலையில் தமிழக அரசுக்கு நிதிநெருக்கடியில் பயனுள்ளதாக இருக்கும் .கடந்த ஆண்டு காலிபணியிடம் போக பின்தங்கியவர்களுக்கு அப்போதைய தேர்தலை கருத்தில் கொண்டு காவல்துறையில் பணி வழங்கப்பட்டது. அதே போல் தற்போது கொரோனா காலத்தையும் தேர்தலையும் மையப்படுத்தி பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு

காவலர் பணியில் சேர்நது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடம் வருடம் தேர்வு எழுதி தோற்காமல் பின்தங்கி இருக்கும் இளைஞர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த மனுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஶ்ரீஅபிநவ் ஆகியோரிடம் அளித்தனர்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading