தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவ ஊழியருக்கு கொரோனா

தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவ ஊழியருக்கு கொரோனா
(கோப்புப் படம்)
  • Share this:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் மருத்துவ ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கன்ட்ரோல் ரூம் பணியில் சுமார் 10 மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு பணிநாட்களுக்கு இடையே தனிமைப்படுத்திக் கொள்ள கால அவகாசம் தரவில்லை என்று புகார்கள் இருந்துவந்த நிலையில் ஆண் செவிலியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.எனவே கன்ட்ரோல் ரூம் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Also read... 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக துரித வாகன சேவைஇதில் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கன்ட்ரோல் ரூம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading