தமிழகத்தில் வெகுவாக குறைந்த புதிய கொரோனா தொற்று, உயிரிழப்பு

மாதிரி படம்

 கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 358 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 28,528  ஆக அதிகரித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 16,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32,049  பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  23,08,838 ஆக அதிகரித்துள்ளது.

  மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 32,049 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,91,646 ஆக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் 400-க்குதம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் குறைந்த உள்ளது.   கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 358 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 28,528  ஆக அதிகரித்துள்ளது.

  கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 2236 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 20 புர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 1223 பேருக்கு கொரோனா தொற்றும், 45 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: