மது அருந்த மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

கோவையில் மது அருந்த மனைவி பணம் தராததால் கணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மது அருந்த மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை
மாதிரிப் படம்
  • Share this:
கோவை எல்.ஐ.சி ஏஜென்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். பிட்டராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று மாலை குறிச்சி குளத்தில் தனது அம்மாவிற்க்கு திதி கொடுப்பதற்காக மனைவி செல்வியுடன் வந்திருந்தார்.

தாயாருக்கு திதி கொடுத்து விட்டு, மனைவி செல்வியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்து விட்டு செல்வி அங்கி௫ந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் குடிக்கு அடிமையான நம்பிராஜன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீண்ட நேரமாக தம்பிரான் வீடு திரும்பாத நிலையில் அங்கு வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் , செல்போன் செருப்பு ஆகியவை கரையில் இருந்ததை பார்த்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Also read... வியாசர்பாடியில் கல்லூரி மாணவன் கொலை... தாதா சண்டை காரணமா?

தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக குளத்தில் தேடி சடலத்தை மீட்டு கோவை அரசு ம௫த்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading