4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக துரித வாகன சேவை

கொரோனா தடுப்பு பணிகள் முடிவுற்ற பிறகு இவ்வாகனங்கள் குறுகிய சாலையில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களில் ஏற்படும் தீயிணை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக துரித வாகன சேவை
துரித செயல் வாகனங்கள்
  • Share this:
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3.90 கோடி ரூபாய் மதிப்பிலான 50 துரித செயல் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனவாசன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி , தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, சைலேந்திர பாபு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் இடங்களில் 5 லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலாக 50 துரித செயல் வாகனங்களின் சேவைவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 இந்த வாகனத்தின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறுகிய சாலையில் சென்று கிருமி நாசினி தெளித்தல், 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் சேமிப்பு வசதி, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

Also read... திருப்பதி மலையில் தீயாய் பரவும் கொரோனா - ஊழியர்கள் 60 பேருக்கு தொற்று உறுதி

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் முடிவுற்ற பிறகு இவ்வாகனங்கள் குறுகிய சாலையில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களில் ஏற்படும் தீயிணை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading