சீன நாட்டிற்கு, இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் - சீன ஆப்கள் தடைக்கு தேமுதிக வரவேற்பு

பிரேமலதா, விஜயகாந்த்

டிக்டாக், ஷேரிட் உள்ளிட்ட சீனாவின்59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு தேமுதிக சார்பில் வரவேற்று அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சீன ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளது தெடர்பாக தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - சீன எல்லையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் சில நாட்களாகவே சீனாவுடன் வர்த்தகத்தை குறைக்கவேண்டும்.

சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் இந்த டிக்-டாக் போன்ற செயலியால் எத்தனையோ லட்சக்கணக்கான பெண்களும், குடும்பங்களும் சீரழிந்து வருவதாகவும், குறிப்பாக இந்த செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டாம் என நானும் எனது மனைவியும் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கேடுவிளைவிக்கக்கூடிய டிக்டாக், ஷேரிட், ஹலோ, உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பது வரவேற்க்க தக்க ஒன்று.

நம் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சீன நாட்டிற்கு, இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். இது போன்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் செயலிகளை நாம்வரவேற்க கூடாது. நம் நாட்டு எல்லையில் நமது ராணுவ வீரர்களை எச்சரிக்க நினைப்பவர்களுக்கு இது எச்சரிக்கை மணியாக தான், இந்த தடையை நான் பார்ப்பதாகவும், எனவே இதை தேமுதிக சார்பில்வரவேற்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: