புவி வெப்பமயமாதலால் புயல் கடக்கும் இடத்தை கணிக்க முடியவில்லை - சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் விளக்கம்
புவி வெப்பமயமாதல் காரணமாக புயல் கரையை கடந்து செல்கின்ற பகுதி எது என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டியின் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை தெரிவித்துள்ளது.

புயல் நிவர்(மாதிரிப் படம்)
- News18 Tamil
- Last Updated: November 27, 2020, 5:05 PM IST
நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐ.ஐ.டியின் கடல்சார் ஆராய்சி துறைத் தலைவர் சன்னாசி ராஜ், ‘மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3-வது ஆண்டாக கடல்சார் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அந்த வகையில் புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சமீப ஆண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து நிலத்திற்குள் கடல் நீர் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை தங்கள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து புயல்கள் ஏற்படுகின்றபோது நில அரிப்பு அதிகளவு ஏற்பட்டு கடல் நீர் உள்ளே வருவதால் நிரந்தரமான பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
புவி வெப்பமயமாதல் காரணத்தால் கடல் மட்ட அளவில் பாதிப்புகள் ஏற்படுவதால் புயல் சமயத்தில் புயல்கள் செல்லும் பாதை மாறுபட்டு அவை கரையை கடந்து செல்லும் இடங்களை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கரையை கடந்து சென்ற புயலின் பாதை மாறுபட்டு தற்போது எதிர்பாராத இடங்களில் கரையை கடப்பதாகவும் கூறினார். புயலுக்கு முன்பிருந்த நிலை மற்றும் புயலுக்குப் பிந்தைய நிலை குறித்து கடல் பகுதிகளில் தங்களது குழு ஆய்வு துவங்கி உள்ளதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் ஆய்வு முடிவுகள் தெரியவரும் என்றும் பேராசிரியர் சன்னாசிராஜ் தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து நிலத்திற்குள் கடல் நீர் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை தங்கள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து புயல்கள் ஏற்படுகின்றபோது நில அரிப்பு அதிகளவு ஏற்பட்டு கடல் நீர் உள்ளே வருவதால் நிரந்தரமான பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
புவி வெப்பமயமாதல் காரணத்தால் கடல் மட்ட அளவில் பாதிப்புகள் ஏற்படுவதால் புயல் சமயத்தில் புயல்கள் செல்லும் பாதை மாறுபட்டு அவை கரையை கடந்து செல்லும் இடங்களை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கரையை கடந்து சென்ற புயலின் பாதை மாறுபட்டு தற்போது எதிர்பாராத இடங்களில் கரையை கடப்பதாகவும் கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்