பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் திமுகவில் கலகம் ஏற்படுத்துகிறேனா...? துரைமுருகன் கண்டனம்

எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து திமுக இயக்கத்திற்கு வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுகன் விளக்கமளித்துள்ளார்.

பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் திமுகவில் கலகம் ஏற்படுத்துகிறேனா...? துரைமுருகன் கண்டனம்
துரைமுருகன்
  • Share this:
தனக்கு பொதுசெயலாளர் பதவி கிடைக்காததால் ஏக்கத்தில் இருப்பதாகவும், கட்சிக்குள் கலகத்தை உருவாக்க முனைவதாகவும் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், தான் இதுவரை பெற்ற பதவிகள் தனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ண கொடியை பிடித்து கோஷமிட்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆசாபாசங்களுக்கு அப்பாற்றபட்டவன் நான் என்று கூறியுள்ள துரைமுருகன், ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது, அமைச்சர்களுக்கு கவரி வீசும் நபர்களுக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க... மருத்துவ மேற்படிப்பு தேர்வுகள் ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும் என அறிவிப்பு


சுமார் 60 ஆண்டுகளாக தன்னை நன்கு அறிந்தவர்கள் திமுக இயக்கத் தோழர்கள் என்றும் தனக்கு எதிரான தில்லு முல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்றும் துரைமுருகன் உறுதிபடக் கூறியுள்ளார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading