தன்னார்வலராக பணியாற்றும் மாணவியிடம் காதல் ரசம் சொட்டப் பேசிய மாநகராட்சி பொறியாளர் - வைரல் ஆடியோ

விசாரணையை அடுத்து, உதவி பொறியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தன்னார்வலராக பணியாற்றும் மாணவியிடம் காதல் ரசம் சொட்டப் பேசிய மாநகராட்சி பொறியாளர் - வைரல் ஆடியோ
மாதிரி படம்
  • Share this:
சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலராக செயல்பட்டு வரும் கல்லுாரி மாணவி ஒருவருக்கு சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் காதல் ரசம் சொட்ட சொட்டப் பேசியுள்ள ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சென்னையில், கொரோனா தொற்றைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக வீடு வீடாகப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் தன்னார்வலப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் ஒரு கல்லுாரி மாணவி தன்னார்வலப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் கமலக் கண்ணன் என்பவர் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவிக்கு அடிக்கடி போன் செய்து நீ அழகாக இருக்கிறாய். உன்னை எனக்குப் பிடிக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்திருந்தால் நீ தான் மிஸஸ் கமல் என்று உருகி உருகி தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.


கமலக் கண்ணனின் தொல்லை பொறுக்க முடியாத மாணவி ஒரு கட்டத்தில் அவரது ஆடியோவை பதிவு செய்து வைத்துக் கொண்டார். பின்னர் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் புகாரளித்தார்; தொடர்ந்து சென்னை எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகாரளித்தார்.

Also read... சென்னையில் ஜுலை தொடங்கி படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்; தன்னார்வலப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் காதல் தொல்லை அளித்த விவகாரம் சென்னை மாநகராட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விசாரணையை அடுத்து, உதவி பொறியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading