தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் எவை?

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் எவை?
கோப்புப் படம்
  • Share this:
தர்மபுரி, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியசும் ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக கோவை மாவட்டம் சின்னக்கால்லாறில் 19 சென்டி மீட்டர் மழையும், கோவை சின்கோனாவில் 14 சென்டி மீட்டர் மழையும், கோவை வால்பாறையில் 13 சென்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டை, திருவாரூர் குடவாசல் தலா 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


இதேபோல்  தேனி வைகை அணையில் 8 சென்டி மீட்டர், திருப்பத்தூர் ஆம்பூரில் 7 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர் வலங்கைமான், நீலகிரி தேவலா, புதுக்கோட்டை பெருங்கலூர், திண்டுக்கல் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும் நாளையும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள குஜராத் கடல் பகுதியில், மத்திய கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள மகாராஷ்டிரா கடல் பகுதியில், தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள கர்நாடகா, வடக்கு கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வரும் ஜூலை 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

மேலும் படிக்க...

ஊரடங்கால் முறுக்கு வியாபாரியான கல்லூரி விரிவுரையாளர்

இன்றில் இருந்து வரும் ஜூலை 4ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று .அதனால் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
First published: June 30, 2020, 2:51 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading