விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சோதனை

Sathankulam case | கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சோதனை
சி.பி.சி.ஐ.டி (கோப்புப் படம்)
  • Share this:
சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்குதலால் தந்தை - மகன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கையை கோவில்பட்டி ஜே.எம். எண் 1 நீதிபதி பாரதிதாசன் நேற்று சமர்ப்பித்தார்.

இதனிடையே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் ஒப்படைத்தார்.மேலும் படிக்க...

புதுச்சேரியில் ஒரு தலை காதலால் மாணவிக்கு நடந்த கொடூரம்சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு நீட்டிப்பு எதுவரை?

இந்நிலையில், தந்தை - மகன் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
First published: July 1, 2020, 10:09 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading