வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவ சமூகத்தினர் - அரசு உதவுமாறு கோரிக்கை

’பாசி மணி ஊசியெல்லாம் விற்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விற்க மாட்டோம்’ என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் தங்களுக்கென தனியொரு முத்திரையுடன் வாழுபவர்கள் நரிக்குறவர் சமூகத்தினர்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவ சமூகத்தினர் - அரசு உதவுமாறு கோரிக்கை
’பாசி மணி ஊசியெல்லாம் விற்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விற்க மாட்டோம்’ என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் தங்களுக்கென தனியொரு முத்திரையுடன் வாழுபவர்கள் நரிக்குறவர் சமூகத்தினர்.
  • Share this:
நரிக்குறவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் காரைக்குடி சமுத்திரகண்மாய் அருகே வேடன்நகர் பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் வாழ்வதற்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தேன், தைலம் , ஊசி மணி பாசி, பேன்சி பொருட்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
உலகையையே புரட்டி போட்ட கொரோனாவிற்கு இவர்களும் தப்பவில்லை. மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக நிபந்தனைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரயில் , பேருந்து போக்குவரத்து, திருவிழாக்கள் தடையால் தொழில்கள் இன்றி அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர் .

இந்நிலையில் 7-வது கட்ட ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு ஒரளவுக்கு தொழில் செய்து பசியை போக்கி விடலாம் என்று எண்ணிய இவர்களின் எண்ணங்கள் பலிக்காதது வேதனைக்குரியது. இரயில், பேருந்துகள் இயக்கப்படாதது இவர்களுக்கு பலத்த அடியாகவே அமைந்துள்ளது .

வாழ்வாதாரத்தை காப்பாற்ற இவர்கள் தற்போது தெருக்களில் நடந்து, வண்டிகளில் சென்று வீடு வீடாக பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும் கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் இவர்களிடம் பொருள்கள் வாங்க தயங்குகின்றனர் .

தொழில் இல்லாததால் வருமானம் இன்றி தவிக்கும் நரிக்குறவர்கள் வாழ்வாதரத்திற்காக சிறிவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாலையில் வாகனங்களில் நடந்து செல்பவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், அரசு உரிய நிவாரணம், போக்குவரத்து தளர்வு ஏற்படுத்தினால் வெளி மாவட்டங்களுக்கு சென்று பொருள்களை கொள்முதல் செய்து சாலையோரங்களில் கடைகள் போட்டு விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading