குப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை: வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை

குப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை: வெளியானது பிரேதப் பரிசோதனை அறிக்கை
மாதிரிப் படம்
  • Share this:
திருச்சி அருகே முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமியின் உடல் பிரத பரிசோதனைக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே சீமை கருவேல மரக் காட்டில் பாதி எரிந்த நிலையில் 14 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் சடலத்தை கைப்பற்றி சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


திருச்சி மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டிஜஜி, மாவட்ட காவல்காணிப்பாளர் ஆகியோர் நேற்றிரவு சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து விடிய விடிய விசாரணையை முடுக்கிவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதனிடையே, சிறுமியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும் சிறுமியின் இறப்பு தீக்காயங்களால் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சிறுமியின் உடல் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading