மீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள் - ஆய்வில் தகவல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளில் 99 விழுக்காடு தமிழில் உள்ளதாக தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலில் 99 விழுக்காடு தமிழில் கல்வெட்டுகள் - ஆய்வில் தகவல்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 26, 2020, 1:47 PM IST
  • Share this:
கல்வெட்டுகளை ஆராய்ந்து புத்தகமாக தொகுக்கும் பணியை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் ஓராண்டாக செய்து வந்தனர். இந்நிலையில் புத்தகம் தொகுக்கப்பட்டு தயாராகியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தலிங்கம், மதுரை கோயில் உருவானதில் இருந்து சுவாமியின் பெயர் திருஆலவாய் உடைய நாயனார்நம்பி சொக்கர் என்றே அழைக்கப்பட்டுள்ளதாகவும், 1898ம் ஆண்டுக்கு பின்னரே மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று பெயர் மாறியதாகவும் கூறியுள்ளார்.Also read... Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை


1,250ம் ஆண்டில் கோயில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டது கல்வெட்டில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இடியும் நிலையில் இருந்ததால் 1190ம் ஆண்டில் சடையவர்மன் குலசேகரபாண்டியனால் முதன் முறையாக கல்கட்டிட கோயிலாக கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது. விரைவில் இந்த புத்தகம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading