கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை.. காதலன், தந்தை கைது..
ஆரணியில் காதலன் தந்தை மிரட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- News18 Tamil
- Last Updated: August 2, 2020, 1:46 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளி ஏழுமலை. இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும் கோபால் என்ற மகனும் வெண்ணிலா என்ற மகளும் இருந்தனர்.
வெண்ணிலா ஆரணியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆரணி சைதாப்பேட்டை கமண்டலநாகநதி தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மகன் பிரசாந்தும், வெண்ணிலாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்தின் தந்தை நாகராஜ் வெண்ணிலாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட வெண்ணிலாவின் தாயார் கன்னியம்மாளை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் கன்னியம்மாள் ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து போலீசார் அனுப்பியதாக தெரிகிறது. வீட்டிற்கு வந்து தன்னை ஆபாசமாகவும், அசிங்கமாகவும் காதலரின் தந்தை திட்டியதால் வெண்ணிலா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிய அக்கம் பக்கத்தினர், எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வெண்ணிலா உயிரிழந்தார்.
காதலரின் தந்தை மிரட்டியதாலும், அதனால் ஏற்பட்ட அவமானம் தாங்கமுடியாமலும் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் கூறி உள்ளனர். போலீசார் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் தங்கள் மகள் உயிரோடு இருந்திருப்பார் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.பெற்றோரின் புகாரையடுத்து, தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து காதலர் பிரசாந்த் மற்று்ம அவரது தந்தை நாகராஜ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
வெண்ணிலா ஆரணியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆரணி சைதாப்பேட்டை கமண்டலநாகநதி தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மகன் பிரசாந்தும், வெண்ணிலாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்தின் தந்தை நாகராஜ் வெண்ணிலாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட வெண்ணிலாவின் தாயார் கன்னியம்மாளை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் கன்னியம்மாள் ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.