தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்சேியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண்ணை அழைக்க முடியாது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு
கோப்பு படம்
  • Share this:
பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044 - 46100100 மற்றும் 044 - 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading