தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூணன் குடும்பத்தினர் மதுரை சென்று வந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் எம்.எல்.ஏ அர்ஜூணன் தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ அர்ஜூணனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் விவரம்

திமுக
ஜெ. அன்பழகன் - சேப்பாக்கம் (இறந்துவிட்டார்)வசந்தம் கார்த்திகேயன் - ரிஷிவந்தியம்
ஆர்.டி.அரசு - செய்யூர்
மஸ்தான் – செஞ்சி
தங்கபாண்டியன் - ராஜபாளையம்

அதிமுக
கே.பி.அன்பழகன் - பாலக்கோடு (அமைச்சர்)
சதன் பிரபாகர் - பரமகுடி
குமரகுரு - உளுந்தூர்பேட்டை
பழனி – ஸ்ரீபெரும்புதூர்
அம்மன் அர்ஜுனன் - கோவை தெற்கு
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading