காமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்...! சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்

கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும் என்று முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்துள்ள நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் கூறியுள்ளார்

காமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்...! சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்
சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகன்
  • News18
  • Last Updated: August 5, 2020, 8:52 AM IST
  • Share this:
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து பலர் ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர். ஆனால், திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கிய காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

இந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்ருஜன் ஜெய், மற்ற சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, யு.பி.எஸ்.சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார். தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் என்ற தன் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார்.

இதுகுறித்து, நாம் அவரிடம் பேசியபோது, ’ஐ,ஏ.எஸ் கனவு என்பது சின்ன வயசுல இருந்தே என்னுடைய விருப்பமா இருந்தது. அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னை ரொம்ப ஊக்குவிச்சாங்க, அப்பா சினிமாவுல இருந்தாலும் எப்பவுமே என்னை சினிமாவுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தினதில்ல. ஆனா நானும், என் தம்பியும் நல்லா டான்ஸ் ஆடுவோம், சண்டை போடுவோம், பல நாடகத்துல நடிச்சிருக்கோம். ஆனால் சினிமா மேல ஆசை வரல... அரசு அதிகாரியாக வரணும் அப்படிங்கறது என்னோட நீண்டநாள் ஆசை. அதுக்காக நிறைய படிச்சேன், அதிக நேரம் ஒதுக்கினேன், இதுக்கு அப்பாவும் அம்மாவும் ரொம்ப துணையாக இருந்தாங்க... அந்த ஒரு சப்போர்ட்தான் இந்த வெற்றியை எனக்கு கொடுத்துருக்கு... 

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு., 75ஆவது ரேங்க் வாங்கினதால நிச்சயமா தமிழ்நாட்டில்தான் எனக்கு போஸ்டிங் கிடைக்கும். கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும். இதுவரைக்கும் வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லைக் கோடும் போடாம உன்னோட வாழ்க்கையை நீயே தீர்மானிச்சுக்க  என்று சொன்ன அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப நன்றி! என்று தெரிவித்தார். அவருடைய பணி சிறக்க நம்முடைய வாழ்த்துகள்!
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading