நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் புதிய ஆவின் மோர் - முதலமைச்சர் அறிமுகம்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக் கூடிய பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட புதிய வகை ஆவின் மோரை முதலமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் புதிய ஆவின் மோர் - முதலமைச்சர் அறிமுகம்
முதலமைச்சர்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலான உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுமாறு அரசும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்களை சேர்த்து புதிய மோரை ஆவின் தயாரித்துள்ளது.

இந்த மூலிகை சக்தி நிறைந்த மோர் உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் சக்தியினை மேம்படுத்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. 200 மி.லி. பாட்டில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

இது தவிர, சாக்கோ லெஸ்ஸி மற்றும் மேங்கோ லெஸ்ஸி ஆகியவையும், 90 நாட்கள் வரை கெட்டுப் போகாத சமன் படுத்தப்பட்ட பால் (UTH Milk) மற்றும், 6.5% கொழுப்பும், 9% புரதமும் நிறைந்த டீ மேட் பால் வகையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.Also read... தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எத்தனை?

ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஐந்து புதிய பொருட்களை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading