வியாசர்பாடியில் கல்லூரி மாணவன் கொலை... தாதா சண்டை காரணமா?

வியாசர்பாடியில் கல்லூரி மாணவன் கொலை... தாதா சண்டை காரணமா?
மாதிரிப்படம்
  • Share this:
சென்னையில், தன் தெருவை விட்டு அடுத்து தெருவில் போய் கெத்து காட்டிய இளைஞர், அங்கிருந்த இளைஞர்கள் சிலரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி சுந்தரம் 6 வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த். சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார்.

இவர் மீது சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது; மேலும் இவர் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியாகவும் இருந்தார்.


பிரசாந்த்தின் தாயார் விநாயகி, மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில், காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக தோழி அம்சாவை அழைத்துவரச் சொன்னார் தாய் விநாயகி.

இதையடுத்து பிரசாந்த் தனது இருசக்கர வாகனத்தில், சுந்தரம் சந்து தெருவில் வசிக்கும் அம்சாவை தனது பைக்கில் அழைத்து வந்தார். வரும் வழியில், 18 வயதான பாலச்சந்துரு உள்ளிட்ட 3 இளைஞர்கள் பிரசாந்த்தை வழிமறித்துள்ளனர். பைக்கில் இருந்து அம்சா இறங்கியுள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் அம்சாவின் கண் முன்னாலேயே பிரசாந்த்தின் காலில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர் கீழே விழுந்ததும் அவரை மேலும் பலமுறை வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.அம்சாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பிரசாந்த்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பிரசாந்த் உயிரிழந்தார்.

கொலை வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே குற்றவாளியாகத் திரிந்த பிரசாந்த், சுந்தரம் தெருவில் ஞாயிற்றுக்கிழமை காலையில், தனது பைக்கில் வீலிங் செய்தபடி கெத்து காட்டியுள்ளார்.

இதை அந்த பகுதியைச் சேர்ந்த பாலச்சந்துரு உள்ளிட்ட இளைஞர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. நமது ஏரியாவில் வந்து கெத்து காட்டினால் இவன் என்ன பெரிய தாதாவாகி விடுவானா என பொருமியுள்ளனர்.

Also read... நாகையில் விளையாடச் சென்ற 19 வயது இளைஞர் சடலமாக கண்டெடுப்பு

ஞாயிறு நள்ளிரவில் அவர்கள் போதையில் இருந்த நேரத்தில் பிரசாந்த் அந்தவழியாக தனது தாயின் தோழியை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளதை அவர்கள் பார்த்துள்ளனர்.

கெத்து காட்டிய இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக இருந்த பாலசந்துரு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading