87 சதவீத மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா காலத்தில், தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் மூலம் 87 சதவிதம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: August 5, 2020, 6:47 PM IST
சென்னை, காஞ்சிபுரம் ,மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்புகள் வழங்காமல் நிலுவையில் உள்ளது.
கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இதனால் மாணவர்களுக்கு உரிய சத்தான உணவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவுரைப்படி சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு மாதம்தோறும் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
Also read... மெக்ஸிகோவில் எலும்புக்கூடு உடையோடு நடமாடும் இளைஞர்... கொரோனா விழிப்புணர்விற்காக வினோத முயற்சி
அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவில் உரிய அரிசி மற்றும் பருப்புசத்துணவு பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
5-ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 கிலோ 100 கிராம் அரிசியும் , உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ 150 கிராம் அரிசியும், மேலும் அனைத்து மாணவர்களுக்கும் தலா 465 கிராம் பருப்பு வழங்க வேண்டும்.
தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 20 லட்சத்து 39 ஆயிரத்து 483 மாணவர்களில் 17,87,989 மாணவர்களுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 14,73,773 மாணவர்களில் 12,38,703 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் 87சதவிகிதம் மாணவர்களுக்கு சத்துணவில் அரிசி.மற்றும்.பருப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இதனால் மாணவர்களுக்கு உரிய சத்தான உணவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.