சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்க்க 4வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது!

ஆக்சிஜன் ரயில்

மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஓரளவு குறைந்து வரும் நிலையில், மேலும் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இன்று காலை மூன்றாவது ரயில் ஒடிசா மாநிலம் காலிங்கா நகரில் இருந்து 80 டன் ஆக்சிஜனுடன் வந்தது.

  • Share this:
    சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்க்க 4வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கடந்த நான்கு நாட்களில் ரயில் மூலமாக சென்னைக்கு 240 டன் ஆக்சிஜன் வந்துள்ளது.

    தமிழகத்தில் நிலவி வரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக வடமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை ரயில் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்றாவது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்த நிலையில், தற்போது 40 டன் எடையுடன் நான்காவது ரயில் ஒடிசா மாநிலம் ஜக்காபூர் பகுதியிலிருந்து சென்னை திருவொற்றியூர் கான் கார் நிறுவனத்திற்கு வந்தடைந்தது.

    தமிழகத்தில் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு சூழ்நிலையை தடுப்பதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேற்குவங்கம் தாராப்பூரில் இருந்து 80 டன் ஆக்சிஜன் ஏற்றி கொண்ட முதல் ரயில் சென்னை வந்தடைந்தது. அதிகாலை 3 மணியளவில் வந்த ரயிலை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் ஆய்வு மேற்கொண்டு லாரிகள் மூலம் மாற்றி தேவைகள் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் நேற்று இரண்டாவது ரயில் ஜார்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 40 டன் ஆக்சிஜனுடன் சென்னை வந்தடைந்தது. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஓரளவு குறைந்து வரும் நிலையில், மேலும் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இன்று காலை மூன்றாவது ரயில் ஒடிசா மாநிலம் காலிங்கா நகரில் இருந்து 80 டன் ஆக்சிஜனுடன் வந்தது.

    இன்று இரவு 4வது ரயில் ஒடிசா மாநிலம் ஜக்காபூரா பகுதியில் திருவொற்றியூர் கான்கார் நிறுவனத்தில் இரண்டு கண்டெய்னர் பெட்டிகளில் வந்தடைந்த ஆக்சிஜன் ரயிலில் இருந்து 4 லாரிகளுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் 4வது ரயில் இங்கு இருந்து லாரிகள் மூலம் மாற்றப்பட்டு சென்னையின் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். கடந்த நான்கு நாட்களில் ரயில் மூலமாக சென்னைக்கு 240 டன் ஆக்சிஜன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published: