நாகையில் விளையாடச் சென்ற 19 வயது இளைஞர் சடலமாக கண்டெடுப்பு

நாகை அருகே 19 வயது இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகையில் விளையாடச் சென்ற 19 வயது இளைஞர் சடலமாக கண்டெடுப்பு
அசாருதீன்
  • Share this:
நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டபோது, மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் என்பவருடைய மகன் அசாருதீன் (19) என்ற இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தபட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்தால் பரபரப்பான சூழல் நிலவியது. விசாரணையில் இளைஞர் நேற்று இரவு நண்பர்களுடன் விளையாட சென்றதும், இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை எனவதும் தெரியவந்துள்ளது. 

பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Also read... கோழிக்கறிக் கடை நடத்துவதில் தகராறு.. இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

வேறு இடத்தில் கொலை செய்து சடலத்தை மர்ம நபர்கள் வீசி சென்று இருக்கலாம் அல்லது வேறு எதேனும் காரணமாக போன்ற கோணத்தில் நாகூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். நாகை அருகே இளைஞர் குத்திக்கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading