12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இதில், தமிழகத்தில் மே 5ம் தேதி முதல் 31 ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வு நடைபெற இருந்தது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்திலும் 12ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 18) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ”12ம் வகுப்பு  மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், 12ம் வகுப்பு மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

கல்லூரி / பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லூரி / பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published:
மேலும் காண்க