தமிழகத்தில் 18 நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 18 நாட்களில் ஒரு லட்சத்து ஓராயிரத்து 961( 101961) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,723 பேருக்கு புதிதாக கொரேனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 5,925 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த  18 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பரவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை 1,01,961 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 89 ஆயிரத்து490 ஆக இருந்தது.

ஏப்ரல் 1ம் தேதி ஒரே நாளில் 2817 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பத்து நாட்களில் 37 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 10 ம் தேதி ஒரே நாளில் 5989 பேருக்கு தொற்று உறுதியானது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் 6 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யும் நிலை உருவானது. ஏப்ரல் 14ம் தேதி ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் 16ம் தேதி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் 17ம் தேதி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் தொற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டது. இன்று 10723 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேதி                மாநிலம்  சென்னை   இறப்பு
ஏப்ரல் 1                   2817.           1083            19
ஏப்ரல் 10              5989.            1977            23
ஏப்ரல் 11.              6618.             2124            22
ஏப்ரல் 12               6711.             2105             19
ஏப்ரல் 13.             6984.            2482            18
ஏப்ரல் 14.             7819.            2564             25
ஏப்ரல் 15.             7946.           2558            29
ஏப்ரல் 16.            8449.            2636            33
ஏப்ரல் 17.             9314.            2884.           39
ஏப்ரல் 18            10723           3304             42

ஏப்ரல் 18ம் தேதி வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 91ஆயிரத்து 451 ஆகும். இதில் 70ஆயிரத்து 391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 18 நாளில் 30 ஆயிரம் பேருக்கு பாதிப்பு. இதேபோன்று சென்னையிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி வரை 2.5 லட்சம் பேருக்கு தொற்று பாதித்திருந்தது. கடந்த 17 நாட்களில் 30 ஆயிரத்து 184 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு நாளில் 1000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு நாளில் 3 ஆயிரம் பேர் வரை தொற்று உறுதியாகிறது. இந்த 18 நாட்களில் தமிழகத்தில் 375 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
மேலும் காண்க