விளையாட்டு

  • associate partner

பஞ்சாப் அபார வெற்றி... கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது

IPL 2020 | KKRvsKXIP | கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மட்டும் பொறுப்புடன் விளையாடி 57 ரன்கள் சேர்த்தார்.

பஞ்சாப் அபார வெற்றி... கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது
IPL 2020
  • Share this:
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்டதிற்கும் முன்னேறி உள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 46-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணயின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், நிதிஸ் ரானா களமிறங்கினார்கள். ரானா டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதையடுத்த வந்த திரிபதி 7 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர்.


கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை கொடுத்து தடுமாறியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மட்டும் பொறுப்புடன் விளையாடி 57 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 28 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த கெயில், மந்தீப் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கெயில் 51 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் மந்தீப் சிங் 66 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் 12 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இரு அணிகளும் 12 புள்ளிகள் எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி 4-வது இடத்தில் உள்ளது.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading