ஐ.பி.எல் 2020 புள்ளிப்பட்டியிலில் அதிரடி மாற்றம்..!

IPL 2020 | இன்றையப் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா மோதுவதால் வெற்றி பெறும் அணியே 4-வது இடத்தை தக்கவைத்து கொள்ளும்.

Advertisement
ஐ.பி.எல் 2020 தொடர் ப்ளே ஆஃப் சுற்று நெருங்கி உள்ள நிலையில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இனிவரும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.

இதனிடையே நேற்றையப் போட்டியில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் வெற்றிப் பெற்றுள்ளதால் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் முறையே 1,2,3 இடங்களில் உள்ளது.

இந்த 3 அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். 4-வது இடத்தை பிடிக்க தான் மற்ற அணிகளுக்கிடையு கடும் போட்டியே நிலவி வருகிறது. கொல்கத்தா 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இன்றையப் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா மோதுவதால் வெற்றி பெறும் அணியே 4-வது இடத்தை தக்கவைத்து கொள்ளும்.அதேப்போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போட்டி போடுகிறது. ஆனால் இந்த இரு அணிகளும் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி தற்போது கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு மிகப் பெரிய அசாதரண சாத்தியங்கள் நடைபெற வேண்டும்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
மேலும் காண்க