ராகிங் செய்தால் இனி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நிர்வாகம்

ராகிங் செய்யும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ராகிங் செய்தால் இனி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நிர்வாகம்
ஜிப்மர் மருத்துவக்கல்லூரி
  • News18
  • Last Updated: July 19, 2019, 1:44 PM IST
  • Share this:
ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு ராகிங் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஏற்கனவே அமுலில் இருந்தாலும் ஆண்டுதோறும் இதற்கான எச்சரிக்கை கல்லூரிகளின் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபட்டால் வழக்கமான தண்டனைகளை விட 25,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் டீன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஒன்று கூடி மாணவர்களை கிண்டல் செய்தல், ஆபாச வார்த்தைகளை கூறுதல், அத்துமீறி நுழைதல், உடல் ரீதியான துன்புறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக முதல் முறையாக அபராதம் என்ற முறை அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு 25,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜிப்மர் சாமிநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... தனியார் பள்ளிக்கு இணையான வசதிகளுடன் அரசு பள்ளி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories