முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சுயசிந்தனை இல்லை - தேர்தல் பிரசாரத்தில் ஆ.ராசா விளாசல்
ஆ.ராசா
மத்திய அரசும் மாநில அரசும் விலையை குறைக்காததால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளது. ஏழை நாடு நாடுகளில் கூட பெட்ரோல் டீசல் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பிரசாரம் செய்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஆ.ராசா, ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் மட்டும் பா.ஜ.க-வுடன் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை. தி.மு.க-வும் கூட்டணி வைத்திருந்தார்கள் என பேசி வருகிறார். நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை எதிர்த்தோம்.
தி.மு.க அறிவித்த திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார் அவருக்கு சுயபுத்தி இல்லை. மத்திய அரசும் மாநில அரசும் விலையை குறைக்காததால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளது. ஏழை நாடு நாடுகளில் கூட பெட்ரோல் டீசல் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தி.மு.க ஆட்சியில் இருக்கிற அளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. விவசாயிகள் நோட்டாவுக்கு வாக்களிப்பதாக வந்த தகவலை விவசாயிகளுடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்போம். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் கூறினால் இதைக் கண்டு பயந்து அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கின்றனர்.
பூரண மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பது என முடிவெடுத்துள்ளது குறித்து விவசாயிகளிடம் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம். கடந்த தி.மு.க ஆட்சியின்போது இருந்த நிலங்கள் பிரித்து இரண்டு ஏக்கர் நிலங்கள் கொடுக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படவில்லை என்பது பொய் குற்றச்சாட்டு.இலவச கேஸ் சிலிண்டர் கொடுக்கிறோம் மாதம் ரூபாய் 1500 உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஏன் ஆட்சியில் இருக்கும்போது கொடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.