கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துள்ளோம் - பாபா ராம்தேவ் பெருமிதம்

கொரோனாவைக் குணப்படுத்த ஆயுர்வேதிக் முறையில் மருந்து கண்டுபிடித்துள்ளோம் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துள்ளோம் - பாபா ராம்தேவ் பெருமிதம்
பாபா ராம்தேவ்
  • Share this:
யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி' நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை வெளியிட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், ‘ஹரித்துவாரிலுள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளோம். ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மருத்துவ ரீதியாக சோதனை செய்யப்பட்ட, ஆதாரம் சார்ந்த முறையில் நாங்கள் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்தை ஆயுர்வேதிக் முறையில் கண்டுபிடித்துள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மருந்துக்கு கொரோனில் மற்றும் ஸ்வாசரி என்று பெயரிடப்பட்டுள்ளது. மூன்று தினங்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஏழு நாள்களில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இறப்பை 0 சதவீதமாக குறைக்க முடியும். இந்த மருந்துப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள் 3 முதல் 7 நாள்களில் 100 சதவீதம் குணமடையும்.டெல்லி மற்றும் அகமதாபாத்தில் இரண்டு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. 280 நோயாளிகளுக்கு சோதனை செய்ததில் அனைவரும் குணமடைந்தனர். இதுவெறும் தடுப்பு மருந்து அல்ல. முழுவதும் குணப்படுத்தக்கூடியது’ என்று தெரிவித்துள்ளனர்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading