கொரோனாவால் பாதிக்கப்பட்ட உ.பி அமைச்சர் கமலா ராணி உயிரிழப்பு

அமைச்சர் கமலா ராணியின் மறைவுக்கு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உ.பி அமைச்சர் கமலா ராணி உயிரிழப்பு
அமைச்சர் கமலா ராணி வருண்
  • Share this:
உத்தரபிரதேசத்தில் பெண் அமைச்சர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் கமலா ராணி என்பவர் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் லக்னோவில் உள்ள ராஜ்தானி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் மோசமடைந்ததால் உயிர்காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.


கமலா ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறந்த சமூக சேவகியான கமலா ராணி திகழ்ந்ததாகவும், அமைச்சரவையில் திறம்பட பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தி நாளை மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தனது பயணத்தை யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading