கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்திய கேரளாவுக்கு ஐ.நா பாராட்டு: நிபா அனுபவம் உதவியதாக அமைச்சர் பகிர்வு

நிபா வைரஸை எதிர்கொண்ட அனுபவம் கொரோனா வைரஸை எதிர்கொள்ள உதவியது என்று ஐ.நா நிகழ்ச்சியில் பேசிய கேரளா அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்திய கேரளாவுக்கு ஐ.நா பாராட்டு: நிபா அனுபவம் உதவியதாக அமைச்சர் பகிர்வு
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா. (கோப்புப் படம்)
  • Share this:
ஐக்கிய நாடுகள் சபை சார்பாக ஆண்டுதோறும் ஜூன் 24-ம் தேதி பொதுச் சேவை நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு வீடியோ கான்ப்ரன்ஸ் முறையில் நடைபெற்றது. இதில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டானியோ கட்டர்ஸ், ஐ.நா. தலைவர் திஜானி முகமது பன்டே, கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சின் யங், உலக சுகாதார அமைப்பன் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், எத்தியோப்பியா அதிபர் ஷாலே வொர்க் ஜூடே, ஐ.நா. மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றேனர்.

இந்தநிகழ்வின்போது, கொரோனா பரவலையும், உயிரிழப்பையும் கட்டுப்படுத்தியதற்காக கேராளவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தநிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘நிஃபா வைரஸை எதிர்கொண்ட அனுபவமும், 2018, 2019-ம் ஆண்டுகளில் வந்த வெள்ளத்தில் சுகாதாரத்துறை பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இந்த அனுபவங்கள் கொரோனா பாதிப்பைக் கையாள உதவியது.வூஹானில் கொரோனா பரவத் தொடங்கியதுமே, கேரளா அரசு உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும், சர்வதேச நடைமுறைகளையும் தீவிரமாக பின்பற்றினோம். ஒரு தொடர்பின் மூலம் கொரோனா பரவுவதை 12.5 சதவீதமாக குறைத்துள்ளோம். இறப்பு எண்ணிக்கை 0.6 சதவீதமாக உள்ளது’ என்று தெரிவித்தார். இந்தியாவிலிருந்து கேரளா அமைச்சர் சைலாஜா மட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading