சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் சாத்தப்பட்டது- நடை திறப்பு எப்போது?

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் சாத்தப்பட்டது- நடை திறப்பு எப்போது?
திருப்பதி (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா தொற்று பரவலை தடுக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தரிசனம் கடந்த 11-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. அனைத்து தரப்பு பக்தர்களும் ஏழுமலையானை தரிசிக்க தொடங்கினர். இதற்காக தினமும் இலவச தரிசனத்துக்கு திருப்பதியிலேயே 3 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று ஏற்படும் கங்கண சூரிய கிரகணத்தை ஒட்டி நேற்று இரவு எட்டரை மணியில் இருந்து அடைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை, இன்று மதியம் இரண்டரை மணிக்கு மேல் கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

15 வயது சிறுமிக்கு ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு... ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது.. சிக்கியது எப்படி?

அதன் பின் கோயிலை கழுவி சுத்தம் செய்து சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகியவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஏகாந்தமாக நடத்தப்பட உள்ளது. ஆயினும் ஏழுமலையானை தரிசிக்க இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading