மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக்டாக் ஆப் செயல்பாடு நிறுத்தம்: இணையதளமும் முடக்கியது

டிக் டாக்

 • Share this:
  இந்திய அரசு 59 சீன ஆப்களுக்கு தடை விதிருந்தநிலையில் டிக்டாக் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

  சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.

  இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதனடிப்படையில், ‘இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தும் டிக்டாக், ஷேர்இட், யூசிப்ரோசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன ஆப்கள் தடை செய்யப்படுகின்றன. இந்தநிலையில், தற்போது முதலே டிக்டாக் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

  முடக்கப்பட்ட டிக்டாக்


  ஏற்கெனவே ப்ளேஸ்டோரிலிருந்து ஆப்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நம்முடைய மொபைல்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த டிக்டாக் ஆப்பும் செயல்படுவதில்லை. கணினியில் இணையம் மூலம் டிக்டாக் தளமும் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரையில், ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட மற்ற ஆப்கள் செயல்பாட்டில் இருந்துவருகின்றன. இந்தநிலையில், கோடிக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆப்பாக டிக்டாக் இருந்து வந்தது.
  Published by:Karthick S
  First published: