யோகா பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவு - மத்திய அமைச்சர் விளக்கம்

யோகா பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவு - மத்திய அமைச்சர் விளக்கம்
ஸ்ரீபத் நாயக்
  • Share this:
யோகா பயிற்சியைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம் இன்று ஆறாவது ஆண்டாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கிவருகின்றனர்.

யோகா குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக், ‘நான் உறுதியாகச் சொல்கிறேன், நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் யோகா குறித்து இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பரப்பியது கொரோனாவுக்கு எதிராக போரிடுவதற்கு உதவியுள்ளது.யோகா பயிற்சியை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஏராளமான மக்கள் வீட்டிலிருந்தே யோகா பயிற்சி செய்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading