டெல்லி திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான கழிவறையில் கதவுகள் இல்லை என்பது மகளிர் ஆணைய தலைவி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் நேற்று திகார் சிறையில் பெண்கள் சிறைச்சாலையை தனது குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண் கைதிகள் அங்கு சில சிரமங்களை அனுபவித்து வருவது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குறிப்பாக, ஒரு அறையில் 3 பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அங்கு கழிப்பிடம் இருந்தது ஆனால் அங்கு சுற்றுச்சுவரோ, கதவோ இல்லாமல் வெளிப்படையாக இருந்தது.
Read More : ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்கள் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 4 வாக்குறுதிகள்
இது மனிதாபிமானமற்ற செயல் என கண்டித்த மகளிர் ஆணைய தலைவி, அதை சரிசெய்யுமாறு சிறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். மேலும், சிறையில் வேலை பார்த்து கூலி பெறும் கைதிகளிடம் பராமரிப்பு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அல்லது கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். மேலும், சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை அரசுத்துறைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தார்.
Must Read : ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு
தெற்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய சிறை என கருதப்படுகிறது திகார் சிறை. இது 3 கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சிறை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்து 26 கைதிகளை கையாளலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர்.