தமிழக- ஆந்திர எல்லையில் சிக்கிய ரூ.5.22 கோடி.. யாருடையது? திடீர் திருப்பம்

தமிழக- ஆந்திர எல்லையில் காரில் கடத்தி வரப்பட்ட 5.22 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் அமைச்சர் ஒருவரின் பணம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது நகைக்கடைக்காரர் ஒருவர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளர்.

தமிழக- ஆந்திர எல்லையில் சிக்கிய ரூ.5.22 கோடி.. யாருடையது? திடீர் திருப்பம்
தமிழக- ஆந்திர எல்லையில் சிக்கிய ரூ.5.22 கோடி.. யாருடையது? சிக்க போவது யார்...
  • Share this:
ஆந்திராவிலிருந்து வந்த சொகுசு காரில், ரூ.5.22 கோடி ரொக்கம் சிக்கிய விவகாரம் இப்போது ஆந்திராவையே அதிரவைத்துள்ளது. இது யாருக்குச் சொந்தமான பணம் என்பதில் பெரிய சர்ச்சையே வெடித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச் சாவடியில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர்.

ஓங்கோலில் இருந்து வந்த அந்த காரில், தமிழக பதிவெண் இருந்தது; மேலும் சட்டமன்ற உறுப்பினருக்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது.


சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, காரில் இருந்த மூன்று பேரும் கீழே இறங்கி தப்பி ஓடினர். சோதனையில் காரில் இருந்த 4 பைகளில் 5,22,00,000 ரூபாய்க்கு மேல் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

பணத்தை சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவருக்கு கொடுக்கச் சொல்லி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓங்கோல் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பாலினேனி சீனிவாஸ் ரெட்டிகொடுத்து அனுப்பியதாக முதலில் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இந்த பணத்திற்கும், தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் பாலினேனி சீனிவாஸ் மறுப்புத்தெரிவித்தார்.வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் சிக்கிய பணத்தின் பின்னணியில் நகைக்கடைக்கார் ஒருவர் இப்பது அம்பலமாகியுள்ளது.

ஓங்கோலைச் சேர்ந்த நல்லம்மல்லா பாலு என்ற நகைக்கடைக்காரர், சிக்கிய ரூ.5.22 கோடி ரூபாய் தனக்கு சொந்தமானது என்று வருமானவரித் துறையிடம் கூறியுள்ளனர்.

சட்டவிரோதமாக எதையும் செய்யாத நிலையில், சோதனைச் சாவடியில் போலீசாரைக் கண்டவுடன் மூவரும் தப்பியோடியது ஏன்?

முதலில், அமைச்சரின் பணம் என்று சொன்னவர்கள், திடீரென நகைக்கடைக்காரரின் பணம் என மாற்றி சொன்னது ஏன்?

5.22 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற நகைக்கடைக் கும்பல் கிட்டலூர் எம்.எல்.ஏ அன்னா ராம்பாபுவின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிச்சென்றது ஏன்?

உறவினரிடம் பணத்தைக் கொடுத்து சென்னையில் தங்கம் வாங்கச் சொல்லியதாக கூறும் நகைக்கடைக்காரர் முழுமையான விவரங்களை வெளியிடாதது ஏன்?

இப்படி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சரும், நகைக்கடை உரிமையாளரும் ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்தேகம் வலுக்கிறது என்கிறது வருமானவரித் துறை.

இந்த நிலையில், தனது பெயரிலான ஸ்டிக்கரை நகைக்கடை கும்பல் போலியாக பயன்படுத்தியதாக கிட்டலூர் எம்.எல்.ஏ அன்னா ராம்பாபு போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஒரே துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

திரைப்படத்தில் வருவதுபோல், அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது இந்த வழக்கு.. வருமானவரித் துறை விசாரணையில் உண்மை வெளிவருமா?
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading