ஹைபர்சோம்னியா (hypersomnia) என்ற மிக அரிதான நோயால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் வருடத்துக்கு 300 நாட்கள் தூக்கத்திலேயே இருக்கிறார்.
42 வயதாகும் புர்க்காராம் என்ற இந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பாத்வா என்ற கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு தூக்கத்திலேயே சாப்பாடு குளியல் என்று குடும்பத்தினர் சேவகம் செய்து வருகின்றனர். ராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் 6 மாத காலம் தொடர்ச்சியாகத் தூங்கக்கூடிய புராணிக நபர் என்றால், நம் புர்க்காராம் 300 நாட்கள் தூக்கத்திலேயே கழிக்கிறார், காரணம் இவருக்கு இருக்கும் ஹைபர்சோம்னியா என்ற ஒரு அரிதான உறக்க நோய்தான்.
பொதுவாக நாளொன்றுக்கு மனிதர்களுக்கு 6 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். ஆனல் இவரோ ஒருமுறை தூங்க ஆரம்பித்தால் 25 நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தூங்குகிறார். அப்படி தூங்க ஆரம்பித்தால் இவரை எழுப்புவது கடினம். 23 ஆண்டுகளுக்கு முன்பாக இவருக்கு இந்த அதிஉறக்க வியாதியான ஹைபர்சோம்னியா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தொடக்கத்தில் 15 மணி நேரமே தூங்கிக் கொண்டிருந்தார். பிறகு படிப்படியாக அதிகரித்து மணிக்கணக்கு எகிற பிறகு நாட்கணக்கும் எகிறியது. இப்போது மோசமாகி 25 நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தூங்குகிறார். இப்படி 300 நாட்கள் தூக்கத்திலேயே வருடங்களைக் கடந்து போகின்றன. வேலையில் இருக்கும்போது கூட இவர் தூக்கத்துக்குள் சென்று விடுகிறார். இதோடு இவருக்கு கடுமையான தலைவலியும் இருந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது ஒரு கொடிய நோய், மற்றவர்களுக்கும் கஷ்டம்,, அவருக்கும் கஷ்டம், ஏனெனில் கடும் களைப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இவருக்கு குளியலும் படுக்கையில்தான், குளிப்பாட்டவில்லை எனில் பெட் சோர் வந்து உடலெல்லாம் புண்ணாகிவிடும்.
இத்தகைய கொடிய நோய் இருந்தும் புர்க்காராம் மனைவி லஷ்மி தேவி, தாய் கன்வரி தேவி இவர் விரைவில் குணமடைந்து சராசரி வாழ்க்கைக்குத் திரும்புவார் என்று நம்புகின்றனர்.