ரஷ்ய நிகழ்ச்சியில் பங்கேற்க மாஸ்கோ புறப்பட்ட ராஜ்நாத் சிங்: சீனா அமைச்சரும் பங்கேற்பு

ரஷ்ய நிகழ்ச்சியில் பங்கேற்க மாஸ்கோ புறப்பட்ட ராஜ்நாத் சிங்: சீனா அமைச்சரும் பங்கேற்பு
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • Share this:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டார்.

2ம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதன் 75ம் ஆண்டு வெற்றி விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங் இன்று விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.இந்த விழாவில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வீ பெங்கும் பங்கேற்க உள்ளார். இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ள சூழலில் இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read...  தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

அதேநேரம், எல்லை பிரச்னை தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை இந்தியாவிற்கு விரைவில் வழங்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதேபோன்று இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கிடையே, தனது பயணத்தின் மூலம் இந்தியா - ரஷ்யா இடையே ராணுவ உறவு வலுப்படும் என்று ராஜ்நாத் சிங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading